ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக ரிசாத் பதியுதீனை அதிலிருந்து காப்பாற்றுவதற்கு அரசாங்கத்துக்குள்ளிருந்தே சிலர் செயற்பட்டதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
இப்பின்னணியில் நடைமுறை அரசும் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளுடன் கூட்டு சேரப் போவதாகவும் அரசுக்குள் இருக்கும் ஒரு கூட்டம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளால் சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னணியில் ரிசாத் பதியுதீனுக்கு தொடர்பிருப்பதாகவும் விமல் வீரவன்ச முன்னர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment