பலமான எதிர்க்கட்சி கூட்டணியொன்றை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆலோசனை நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் ராஜித சேனாரத்ன.
பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளது. இப்பின்னணியில் இளைஞர்களுக்கான செயலமர்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், ரணில் - மைத்ரி - சஜித் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூக கட்சிகளோடும் கலந்துரையாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment