கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் ஜனாஸா அடக்கத்துக்கு இலங்கை அரசு அனுமதியளித்திருப்பதற்கு உலக முஸ்லிம் லீக் நன்றி தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாக தமது நன்றியைத் தெரிவித்துள்ளார் உலக முஸ்லிம் லீக் செயலாளர் ஷேக் முஹம்மத் ஈஸா.
இதேவேளை இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பும் இலங்கையின் அண்மைய அறிவிப்பை பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment