கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களது ஜனாஸாக்கள், ஓட்டமாவடி பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு அதிகமான உறவினர்கள் வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை 38 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை அனைத்து மார்க்க கடமைகளும் முறையாக நிறைவேற்றப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஜனாஸாக்களை பார்வையிட அதிக உறவினர்கள் வருவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment