முன்னாள் ஜனாதிபதிகளை, அவர்களது பதவிக் காலத்தில் இடம்பெற்ற தவறுகளுக்காகத் தண்டிக்க முனைவது நாட்டுக்கு ஆபத்தானது என்கிறார் தயாசிறி ஜயசேகர.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நெருக்கடிகள் உருவாகியுள்ள நிலையில் இப்படிச் சென்றால் ஈற்றில் நாட்டில் ஒரு முன்னாள் ஜனாதிபதியும் நிம்மதியாக இருக்க முடியாது போகும் என விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு பெரமுனவில் கடுமையான எதிர்ப்புகள் தொடர்வதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment