அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியிருந்த அல்லது உரிமை கொண்டாடி வந்த சுமார் 20,000 பேருக்கு அரசாங்கமே அதற்கான காணி உரிமையை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி மக்களுக்கு இன்று காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மானியமாக வழங்கப்பட்டுள்ள இக்காணிகளில் வீடு கட்டிக் கொள்ள அல்லது விவசாயம், பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த 19 பேருக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment