பங்களதேஷ் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவை விமான நிலையத்துக்கு நேரடியாகச் சென்று வரவேற்பளித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹஸீனா.
ஸ்ரீலங்கன் விமானத்தில் அங்கு சென்றுள்ள பிரதமர் இரு நாட்டு உறவுகள் தொடர்பிலான கலந்துரையாடல்களிலும் பங்களதேஷின் விசேட சுதந்திர தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
பங்களதேஷ் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பொன் விழா கொண்டடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment