ஈஸ்டர் விசாரணை அறிக்கை: அஸ்கிரிய தேரர் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Monday, 1 March 2021

demo-image

ஈஸ்டர் விசாரணை அறிக்கை: அஸ்கிரிய தேரர் அதிருப்தி!

 

78WyQPb

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, ஈற்றில் சிங்களவர்களே தாக்குதலின் சூத்திரதாரிகள் என்று உலகுக்குச் சொல்வதா அதிருப்தி வெளியிட்டுள்ளார் அஸ்கிரிய பீடத்தின் பேராசிரியர் நாரம்பனாவ ஆனந்த தேரர்.


சர்வதேசத்தின் பார்வையில் இது நகைப்புக்குரிய விடயமாக மாறியுள்ளதாகவும் அறிக்கையின் பிரகாரம் தாக்குதலின் சூத்திரதாரிகள் சிங்களவர்கள் என்பதே அதனூடாக எழும் தோற்றப்பாடு எனவும் அவர் தெரிவிக்கிறார்.


ஆயுதங்கள் பெறப்பட்ட விதம், திட்டமிட்ட விதங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்கள் இணைக்கப்படவில்லையெனவும் இதனூடாக தாக்குதல் திட்டம் பற்றிய தெளிவு இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் ஞானசாரவும் பொறுப்புதாரியாக உள்ளடக்கப்பட்டிருப்பது தொடர்பில் பொது பல சேனாவும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment