நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் ஹலீம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான எட்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீமாவார். அண்மையில் 'பேச்சு சுதந்திரம்' வேண்டும் என்று போராட்டம் ஒன்றில் பதாதை பிடித்த நிலையில் காணப்பட்டதன் பின்னர் பொது நிகழ்வுகளில் பெருமளவு கலந்து கொள்ளாத நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரர் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்சமயம், இலங்கையில் 2803 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment