தற்போதிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டாம் என முக்கிய பௌத்த தேரர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கடுமையாக உழைத்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கசப்ப தேரர், விமலஜோதி தேரர் உட்பட பல தேரர்கள் ஒப்பமிட்டு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, தற்காலத்தில் தேர்தல் ஒன்று நடக்குமானால் அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என ஆனந்த தேரர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment