இலங்கைக்கு ஆறு லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முன் வந்துள்ளது சீனா.
ஏலவே மூன்று லட்சம் தருவதாக வாக்குறுதியளித்திருந்த நிலையில் மேலும் மூன்று லட்சம் தடுப்பூசிகளை வழங்க சீனா இணங்கியுள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதர் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையில் சீன தடுப்பூசி பாவனைக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லையென்பதும் சுமார் 56 நாடுகளுக்கு சீனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment