ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாட்டில் பரவலாக கண்டெடுக்கப்பட்ட கத்திகள் - வாள்கள் தொடர்பில் பிரத்யேக விசாரணை இடம்பெறுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டினல் மல்கம் ரஞ்சித்தினால் இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகி பதிலளிக்கையிலேயே அரசு தரப்பு இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
குறித்த ஆயுதங்கள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன அல்லது இறக்குமதி செய்யப்பட்டன என்பது தொடர்பில் தனியான பொலிஸ் குழு விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலையடுத்து பல இடங்களில் இவ்வாறு கத்தி - வாள்கள் மீட்கப்பட்டிருந்த அதேவேளை, அதில் பல 'குர்பான்' தேவைகளுக்காக இருப்பதாக பள்ளிவாசல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், கொழும்பு 2ல் கணிசமான அளவு, இறக்குமதி செய்யப்பட்டிருந்த புதிய கத்திகள் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான கூர்மையான ஆயுதங்கள் யாரால்? யாருடைய நிதிப் பங்களிப்பில் இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கார்டினல் தனது மனுவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment