ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் தொடர்பு பட்டதாக கடந்த காலத்தில் இடம்பெற்ற கைதுகளின் தொடர்ச்சியாக இவ்வாரம் ஆகக்குறைந்தது நால்வர் கைதாகியுள்ளனர்.
மாவனல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் வெலிகமையில் கைதாகியிருந்த அதேவேளை, மாத்தளையில் ஒருவரும் நேற்றைய தினம் சிலாபம் மற்றும் மதுரங்குளியைச் சேர்ந்த இருவரும் கைதாகியுள்ளனர்.
முன்னைய இருவரைப் போன்று நேற்று கைதானவர்களையும் தடுத்து வைத்து விசாரிக்கப் போவதாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை அனைவரும் ஈஸ்டர் சம்பவத்தின் பின்னணியுடன் தொடர்புள்ளவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment