ஊடகவியலாளர் ஒருவர் தான் கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியிட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
மார்ச் 10ம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறும் குறித்த ஊடகவியலாளர் சத்துரவின் அலுவலகத்துக்குச் சென்றதாகவும் இதன் போது அங்கு ராஜிதவும் சென்றிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு இருவரும் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment