கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிரான ரஷ்ய தயாரிப்பான Sputnik V தடுப்புபூசி பாவனைக்கும் இலங்கையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆர்ஜன்டினா, ஹங்கேரி உட்பட 39 நாடுகள் உபயோகித்து வரும் நிலையில் இலங்கையிலும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய தடுப்பூசிகள் போன்றே 21 நாட்கள் இடை வெளியில் இரு தடவைகளில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்பதோடு இரண்டாவது தடவை சற்று வித்தியாசமான மூலக்கூறுகள் உள்ளடக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment