சுவாச நோயால் அவதியுற்ற ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், அவருக்கு அங்கு சிகிச்சையளிக்காமல் திக் ஓயா வைத்தியசாலைக்கு மாற்றி, அங்கு அவர் உயிரிழந்ததன் பின்னணியில் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலை தாக்கி சேதப்பட்டுத்தப்பட்டுள்ள சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த நோயாளிக்கு அங்கு சிகிச்சையளிக்க முடியாத நிலையிலேயே திக்ஓயா வைத்தியசாலைக்கு மாற்றியதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், அங்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதோடு அவருக்கு கொரோனா இருப்பதாகவும் அன்டிஜன் பரிசோதனை ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியிலேயே மஸ்கெலிய வைத்தியசாலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியர் உட்பட ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டு, வைத்தியரின் வாகனமும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment