அரிசித் தட்டுப்பாடு வராது: அளுத்கமகே விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 March 2021

அரிசித் தட்டுப்பாடு வராது: அளுத்கமகே விளக்கம்!

 


நாட்டில் அரிசித் தட்டுப்பாடு வருவதற்கு எவ்வித காரணமும் இல்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.


3 லட்சம் மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் ஏலவே கொள்வனவு செய்திருப்பதாகவும் அரிசி தட்டுப்பாடு வாய்ப்பில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு, உணவுப் பண்டங்களின் தட்டுப்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருகின்ற நிலையில் அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment