பாடசாலை மட்டத்திலேயே மாணவர்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்த அறிவை வழங்கும் நிமித்தம் அதனை பாடத்திட்டத்தில் உள்வாங்குவது குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் நீதியமைச்சர்.
இதற்கான குழுவில் சுசில் பிரேமஜயந், ரவுப் ஹக்கீம், டயானா கமகே, வீரசுமன வீரசிங்க உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறு வயதிலிருந்தே நாட்டின் சட்டங்களை அறிந்து வைத்திருப்பதன் ஊடாக நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என நீதியமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment