கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை மாலை முதலாவது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதுடன் இன்று இரவு 08.30 மணிக்கு ஒன்பதாவது ஜனாஸாவும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்;களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டது
கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் அட்டாளைச்சேனை ஒருவர், காத்தானகுடி ஒருவர், அக்கறைப்பற்று ஒருவர், சாய்ந்தமருது மூன்று, கோட்டமுனை ஒன்று, ஏறாவூர் இரண்டுமாக மொத்தம் ஒன்பது ஜனாஸாக்கள் இன்று (05.03.2021) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment