ஈஸ்டர் தாக்குதல்: அமீரகத்திலிருந்து வந்த நபர் கைது - sonakar.com

Post Top Ad

Monday, 22 March 2021

ஈஸ்டர் தாக்குதல்: அமீரகத்திலிருந்து வந்த நபர் கைது

 


ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ளதாக கருதப்படும் மாவனல்லையைச் சேர்ந்த நபர் ஒருவரை வெலிகமயில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருப்பியனுப்பப் பட்டிருந்த குறித்த நபர் கடந்த 10ம் திகதி நாடு திரும்பியுள்ளதாகவும் கைதின் போது 2.7 மில்லியன் ரூபா பணம் கைவசம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மாவனல்லை பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment