பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்ளாள் ஆளுனர் அசாத் சாலியின் பேச்சு தவறாக விளங்கப்பட்டிருப்பதாகவும் அவர் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராகப் பேசவில்லையெனவும் தெரிவித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.
நாட்டின் குற்றவியல் சட்டத்தை அசாத் சாலி குறிப்பிடவில்லையெனவும் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சி குறித்தே அசாத் கருத்துரைத்திருந்ததாகவும் அதுவே தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்குபவர்கள் போன்ற தோரணையை உருவாக்குவதற்கே அசாத் சாலி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், இவ்வாறான பேச்சுக்களுக்கு கைது செய்வதாயின் நாடாளுமன்றுக்குள்ளேயே இனவாதத்தைத் தூண்டுமளவுக்கு பேசுபவர்கள் இருப்பதாக சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment