துமிந்தவை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 22 March 2021

துமிந்தவை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

 


மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பதாகவும் அவரைக் கைது செய்யுமாறும் கோரி ஜனாதிபதிக்கு விடுத்துள்ளார் பெரமுன பிரமுகர் சனத் நிசாந்த.


கடந்த ஆட்சிக்காலத்தில் துமிந்தவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் அதற்கமைவாக ரஞ்சன் ராமநாயக்கவும் குறித்த நீதிபதியும் உரையாடிய ஒலிப்பதிவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


இதேவேளை, கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளான துமிந்தவை மஹிந்த அரசு காப்பாற்றி வந்ததாகவும் நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் கடந்த ஆட்சியின் போது ஹிருனிகா தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment