இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்குத் தடை விதிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் பல நாடுகள் பேசி வரும் நிலையில், அதற்கான முடிவு நீண்ட கலந்துரையாடலின் பின்னரே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கிறார் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் வினவப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததுடன் சரத் வீரசேகர தனது அபிப்பிராயத்தையே வெளியிட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மத்தியில் மாறி வரும் கலாச்சாரம் தொடர்பில் நீண்ட அவதானமும் கலந்துரையாடலும் அவசியப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment