ஈஸ்டர் தாக்குதல் நாடகத்தினை நடாத்தி அதனால் பயனடைந்தது ராஜபக்ச குடும்பமே என தெரிவிக்கும் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, அத்தாக்குதலின் சூத்திரதாரிகள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவும் பசில் ராஜபக்சவுமே என தெரிவிக்கிறார்.
இதற்கான நிதியை வழங்கியவர் நிசங்க சேனாதிபதி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்றதனால் ரணிலுக்கோ மைத்ரிக்கோ எவ்வித பயனும் கிடைக்கவில்லையெனவும் சம்வம் நடந்து ஒரு வாரத்திலேயே தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்ததாகவும் அதனால் பயனடைந்ததும் அவர்களே எனும் அடிப்படையில் சூத்திரதாரிகள் யார் என்பது இரகசியமில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment