ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியென தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர.
கட்டாரிலிருந்து இயங்கும் குறித்த நபரே சஹ்ரான் குழுவை தாக்குதலுக்குத் தூண்டியிருப்பதாகவும் அதனூடாகவே ஈஸ்டர் தாக்குதலுக்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இப்ராஹிம் சகோதரர்கள் உட்பட பல சர்வதேச அமைப்புகள் நிதி வழங்கியிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணையூடாக தாக்குதலுக்குக் காரணமாக சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படவில்லையெனும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் அமைச்சர் இன்று இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment