கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரில் 'அடக்கும்' வழக்கமுள்ளோரின் உடலங்களை இரணைதீவில் அடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரணை தீவில் வசிக்கும் மக்கள் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இப்பின்னணியில் உடலங்களைப் புதைப்பதற்காக கடற்படையினரால் தோண்டப்பட்ட குழிகளை பொது மக்கள் மூடியுள்ளனர்.
சுமார் 108 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேரளவிலான சனத்தொகையைக் கொண்ட குறித்த தீவுப் பகுதியிலேயே உடலங்களை அனுமதிக்க முடியும் என தெரிவிக்கும் அரசு, நிலத்தடி நீர் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் எனும் போலி விஞ்ஞானத்தை தொடர்ந்தும் நிரூபிக்க முனைந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment