அக்குறணையில் தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இராண்டாம் மொழியான சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வலுவூட்டும் செயற் திட்டம், அஸ்டா அமைப்பின் ஏற்பாட்டில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீனின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திலுள்ள அக்குறணை பிரதேசத்திலுள்ள தெளும்புகஹவத்த, குருகொட ஆண்கள் பாடசாலை, பங்கொல்லாமட, மல்வானஹின்ன ஆகிய நான்கு பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5, 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவவர்களுக்கு இலவசமாக சிங்கள மொழிப் பாட நூல்கள் வழங்கி இலவசமாக சிங்கள மொழி கற்பிக்கின்ற செயற் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் அக்குறணை 7 ஆம் மைல்கல்லில் அமைந்துள்ள வூட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் அஸ்டா நிறுவனத்தின் தலைவர் ஏ. எம். அனஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். கட்டுகஸ்தோட்டை கல்வி வலய உதவிப் பணிப்பாளர் எம். எஸ். ராசிக், அஸ்டா அமைப்பின் செயலாளர் ஏ. ஜீ. பசான் முஹமட், பாடசாலை அதிபர்கள், மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர் மாணவிகளுக்கான ஆறு மாத கல்வி போதனைக்கான சிங்கள இரண்டாம் மொழிக்கான பாட பயிற்சிப் புத்தகங்கள் அதிபர்களிடம் இலவசமாக கையளிக்கப்பட்டன.
இக்பால் அலி
No comments:
Post a Comment