கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் ஒன்பது ஜனாஸாக்கள் இன்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் பல ஜனாஸாக்களை அடக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த கட்டாய ஜனாஸா எரிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில் வர்த்தமானியில் இரணைதீவிலேயே அடக்கம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்றைய தினம் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் கிழக்கு மாகாணம், ஓட்டமாவடியில் ஜனாஸா அடக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன.
பல தினங்களாக பாதுகாக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களும் இதில் உள்ளடக்கம் என்பதோடு எதிர்வரும் தினங்களில் மேலும் பல ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment