மனித உரிமை பேரவையில் பாரிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்து வரும் நிலையில் சரத் வீரசேகரவின் பேச்சுக்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் ஐ.நாவுக்காக இலங்கை பிரதிநிதி சீ.ஏ. சந்திரபிரேம.
இவ்வாறான சூழ்நிலையில் புர்கா தடை உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான சில பேச்சுக்களால் இலங்கைக்கு எதிர்பார்க்கப்படும் ஆதரவு கிடைக்காமல் போகக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, தன்னை நம்பி ஒப்படைத்திருக்கும் காரியத்தையே தான் செய்யதாக கூறிக்கொள்ளும் சரத் வீரசேகர, முஸ்லிம் விவகாரங்களிலேயே தொடர்ந்தும் இலக்கு வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment