ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்த எதிர்ப்பு சபையில் இருக்கவில்லையென புளகாங்கிதம் வெளியிட்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன.
இன்றைய வாக்கெடுப்பின் போது 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்த்திருந்த நிலையில் 21:11 எனும் அடிப்படையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக சித்தரிக்கப்படுகிறது.
எனினும், எதிர்பார்த்த வெற்றியை ஐரோப்பிய நாடுகள் பெறவில்லையென வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment