தற்போதுள்ள சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டால் அரசாங்கம் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என தெரிவிக்கிறார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.
மஹிந்த ஆட்சி மீண்டும் உருவாவதற்காக கடுமையாக உழைத்திருந்த குறித்த தேரர் அண்மைக்காலமாக அரசை விமர்சித்து கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையிலேயே, தேர்தல் தொடர்பில் கருத்துரைத்துள்ள தேரர், மக்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன் வாழ்வதற்கான வழி முறைகள் இல்லாது போயிருப்பதால் அதிலிருந்து மீள்வதே முக்கிய பிரச்சினையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment