இலங்கையில் சுமார் 8 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் நீதியமைச்சர்.
சாதாரணமாக காணி விவகாரங்கள் அடுத்த தலைமுறையினரும் வழக்காடும் வகையில் இழுத்துச் செல்லப்படுவதாகவும் கிரிமினல் வழக்கொன்று முடிய 9 வருடங்கள் ஆவதாகவும் 350 நீதிபதிகளைக் கொண்டே லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்கான ஒன்லைன் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளமையும் கடந்த ஆட்சியில் தற்போதைய அரசின் முக்கிய நபர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் விரைவாக முடிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment