பொலிஸ் ஊழியர் ஒருவரினால் 'உயிராபத்து' ஏற்படும் வகையில் தாக்கப்படின், தற்பாதுகாப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ள பொது மக்களுக்கு உரிமையிருப்பதாக விளக்கமளித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர்.
நேற்றைய தினம் பன்னிபிட்டிய பகுதியில் போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினால் லொறி சாரதியொருவர் தாக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியுள்ளதுடன் குறித்த காட்சிகள் பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஓ.ஐ.சி மீது மோதிய லொறி சாரதியை நடு வீதியில் வீழ்த்தி, அவர் மீது பாய்ந்து குறித்த கான்ஸ்டபிள் தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment