சவுதியிலிருந்து இம்முறை 75 மெ.தொன் பேரீத்தம் பழம் - sonakar.com

Post Top Ad

Sunday, 28 March 2021

சவுதியிலிருந்து இம்முறை 75 மெ.தொன் பேரீத்தம் பழம்

 


இவ்வருட ரமழானை முன்னிட்டு சவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு 75 மெற்றிக் தொன் பேரீத்தம் பழம் வழங்கப்பட்டுள்ளது.


சவுதி தூதரககத்தின் பிரதி தூதர் றியாப் அல் ஷரீப் இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைத்திருந்த நிலையில் அது தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


கடந்த வருடம் ரமழான் முடிந்த பின்னரும் சில ஊர்களுக்கு சவுதி பேரீத்தம் பழம் சென்றடையவில்லையென முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.


- Ashraff.A.Samad

No comments:

Post a Comment