கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களுள் 31 இதுவரை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் எட்டு ஜனாஸாக்கள் இன்றைய தினம் அடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டாய ஜனாஸா எரிப்பினை அரசு கைவிடுவதாக அறிவித்த நிலையில் ஜனாஸாக்கள் குளிரூட்டியில் பாதுகாக்கப்பட்டு வந்த அதேவேளை இரணை தீவை அறிவித்திருந்த போதிலும் ஓட்டமாவடியிலேயே அடக்கப் பணிகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இடத்தேர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் சுகாதார பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment