2030 வரை வேறு ஒருவர் ஜனாதிபதியாவது பற்றி பேச்சில்லை என்கிறார் தீவிர கோட்டாபே ராஜபக்ச ஆதரவாளராகத் தம்மைக் காட்சிப்படுத்திக் கொள்ளும் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க.
கோட்டாபே ராஜபக்சவின் பதவிக்காலம் முடிந்ததும் அவர் 2024ல் மீண்டும் போட்டியிட மாட்டார் என்றும் பேச்சு நிலவுகின்ற நிலையில் பசில் ராஜபக்சவே அடுத்த தெரிவென பெரமுன உறுப்பினர்கள் சிலர் கருத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஷெஹான் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அடுத்து வரும் எட்டரை வருடங்களுக்கு கோட்டாபே ராஜபக்சவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பார் என தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment