கொரோனா தொற்றினால் இறந்ததாகக் கூறி எரிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குழந்தை தொடர்பிலான வழக்கிலிருந்து நீதிபதியொருவர் விலகிக் கொண்டுள்ளார்.
குழந்தையின் பெற்றோரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதில் ஒருவர் விலகிக் கொண்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் விலகுவதாக நீதிபதி யசந்த கொடகொட தெரிவித்துள்ள நிலையில் வழக்கின் விசாரணை மே 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment