இந்தோனேசியா, மகசார் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்து 14 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்தாரிகள் என சந்தேகிக்கப்படும் இருவரே உயிரிழந்திருப்பதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே தாக்குதலை நடாத்தியதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்துக்குள் நுழைய முயன்றவர்களை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment