பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று பாதை விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்த சம்பவத்தில் 14 பேர் (இதுவரை) உயிரிழந்துள்ளனர்.
சுமார் 200 அடி பள்ளத்தில் பேருந்து வீழ்ந்துள்ள அதேவேளை சாரதி உட்பட 30 வரை காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment