மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் (28) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 1120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதில் பிடியாணையுள்ள 419 பேர் மற்றும் பாரிய குற்றச்சாட்டுகள் உள்ள 47 பேர் உடட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள 549 பேர் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment