தோட்டத் தொழிலாளர்களுக்கான தினசரி ஊதியத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
900 ரூபா ஊதியமாகவும் 100 ரூபா மேலதிக கொடுப்பனவாகவும் குறிப்பிடப்பட்டு தினசரி ஊதியத்தை ஆயிரம் ரூபாவாக நியமித்து இவ்வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
900 ரூபா சம்பள உயர்வுக்கு நிறுவனங்கள் இணங்கியிருந்த நிலையில் வரவு - செலவுத் திட்டம் ஊடான மேலதிக கொடுப்பனவாக 100 ரூபா இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment