கட்டாய ஜனாஸா எரிப்பு உட்பட யுத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பாரிய மனித உரிமைகள் மீறல்கள் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை முறியடிக்க பாகிஸ்தானின் உதவி நாடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு பாகிஸ்தான் ஊடாக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்னும் இரு வாரங்களில் பாக். பிரதமரின் இலங்கை வருகையும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்திய நலனின் அடிப்படையில் இலங்கையுடன் நல்லுறவைப் பேணி வரும் பாகிஸ்தான் உட்பட ஏனைய முஸ்லிம் நாடுகள், உள்நாட்டு விவகாரங்களில் தாம் தலையிட விரும்பவில்லையென தொடர்ச்சியாக ஒதுங்கியிருப்பதுடன் கட்டாய ஜனாஸா எரிப்பு விடயத்திலும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment