ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், தடைக்கு முன்பாக இருந்தது போன்று 14 நாட்கள் சுய தனிமைப்படல் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை போன்ற கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பயணிகள் வருவதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிருப்பதாக கண்டறியப்படின் வெளிநாடுகளிலிருந்து வருபவர்குள் கொக்கல இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றிலாத பயணிகள், விரும்பினால் தமது சொந்த செலவில் ஹோட்டல்களில் தனிமைப்பட முடியும் எனும் நடைமுறை தொடர்வது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment