இன்று முதல் இலங்கையில் அனைத்து தொடர்பாடல்களும் ஒட்டுக்கேட்கப்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை மறுத்துள்ளது இலங்கை தொலைத் தொடர்பாடல் ஆணைக்குழு.
அவ்வாறான எவ்வித திட்டமுமில்லையெனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
வட்சப் உட்பட அனைத்து தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் இன்று முதல் அரசாங்கத்தினால் ஒட்டுக்கேட்கப்படும் என்று கடந்த சில வாரங்களாக தகவல் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment