நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நேற்றிரவோடு திடீரென நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பில் மாற்றமில்லையாயினும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு எதுவித முன்னறிவித்தலுமின்றி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட-கிழக்கு சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு பேரணியில் எம்.ஏ சுமந்திரன் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment