ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை 'கூட்டணி' யென்கிற பேச்சுக்கு இடமில்லையென தெரிவிக்கிறது சமகி ஜனபல வேகய.
எதிர்க்கட்சிகள் எனும் பொதுத் தளத்தில் இணைந்து இயங்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகின்ற போதிலும் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டணியாக இயங்குவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தலைவரா இருக்கும் வரை பரிசீலிக்கப் போவதில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்காலம் என்று ஒன்று இருந்தால் அது சமகி ஜன பல வேகயவுடன் கை கோர்ப்பதால் மாத்திரமே சாத்தியப்படும் எனவும் சமகி ஜன பல வேகய முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றமையும் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment