உயிரிழந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை நடாத்த அனுமதி கேட்டு தொடுக்கப்பட்டிருந்த வழக்கொன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு இம்மனுவை விசாரித்து நிராகரித்துள்ளது.
முதலாவது நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தவறிருப்பதாகவும் அதனை உறுதி செய்யும் நிமித்தம் இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை நடாத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியே தந்தையினால் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, முதலாவது பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதே தினம் இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்றில்லையென தரப்பட்ட முடிவைக் கொண்டு கடந்த டிசம்பர் மாதத்தில் நபர் ஒருவர் வெளிநாடு சென்ற சம்பவம் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment