P2P போராட்டம் இறுதி நாள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 7 February 2021

P2P போராட்டம் இறுதி நாள்!

  


இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை எதிர்த்து பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி இன்று இறுதி நாளையடைந்துள்ளது.


கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியுள்ள பேரணி பொலிகண்டியில் நிறைவுறவுள்ள அதேவேளை பெருந்திரளான மக்கள் இதற்று ஆதரவளித்துள்ளதுடன் காணாமல் போனதாகக் கூறப்படுவோரின் உறவுகளும் இணைந்துள்ளனர்.


நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல், கட்டாய ஜனாஸா எரிப்பு, மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளடங்கலான விடயங்களை முன் வைத்து இப்பேரணி இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து இடங்களிலும் மக்கள் பெருமளவில் திரண்டு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment