இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளை எதிர்த்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எனும் இலக்கில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.
மன்னாரில் பேரணி இடம்பெறுவதற்கு பல்வேறு இடையூறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
நாளைய தினம் கவனயீர்ப்பின் இறுதி நடவடிக்கைகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment