விகாராதிபதி ஒருவரிடம் ஒரு மில்லியன் ரூபா பணம் பறிப்பதற்கு முயன்ற பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, பிரதேச சபை உறுப்பினர் உட்பட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பலபிட்டிய, பத்தேகம யோகாஷ்ரம விகாராதிபதியிடமே இவ்வாறு பணம் பறிக்க முயற்சி இடம்பெற்றுள்ள அதேவேளை சந்தேக நபர்கள் தம்மை மேல் மாகாண சிரேஷ்ட டி.ஐ.ஜியின் சகாக்கள் எனக் கூறி அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபர்கள் அஹுங்கல பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment